உத்தமபாளையம் அரசு மருத்துவமனை விரிவாகக் கட்டிடம் திறந்து வைத்த எம்பி
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் அரசு மருத்துவமனை விரிவாக்க கட்டிடத்தினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் இதனைத் தொடர்ந்து தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி பெயர் பலகையை திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கர்த்தரவுத்தர் கல்லூரி தாளாளர் தர்வேஸ் முகைதீன் உத்தமபாளையம் திமுக ஒன்றியச் செயலாளர் அணைப்பட்டி வி. முருகேசன் உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பேரூராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.எஸ் முகமது அப்துல் காசிம் உள்ளிட்ட ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்