காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா.
தமிழக அரசின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா காங்கேயம் கல்விநிறுவனத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதல்வர் முனைவர். எஸ். ராம்குமார் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.
காங்கேயம் கல்விக் குழுமத்தின் தாளாளர்.எஸ். ஆனந்த வடிவேல் அவர்கள் இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு மு. பெ. சாமிநாதன் அவர்கள் சிறப்புரையாற்றி கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கினார்.
மேலும், காங்கேயம் கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.என். இராமலிங்கம் அவர்கள், செயலாளர்.சி.கே.வெங்கடாச்சலம் அவர்கள், பொருளாளர் .சி.கே. பாலசுப்ரமணியம் அவர்கள், காங்கேயம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஆர்.வி.மகேந்திர கௌடா அவர்கள் மற்றும் காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல் சைன்ஸ் அன்ட் ரிசர்ச் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ். ஜெயராமன் ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் காங்கேயம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் காமெர்ஸ் கல்லூரி முதல்வர் முனைவர் G.சுரேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.