காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெருந்துறை உள்ள செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 12வது பட்டமளிப்பு விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில் செயிண்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் V. சுப்பையா பாரதி கலந்து கொண்டு பல்கலைகழக அளவில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உட்பட 550 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அதில் AI யின் முக்கியத்துவம் குறித்தும் அதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பணி வாய்ப்புகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
விழாவில் MMI இன்ஸ்டியூஷன் நிறுவனர்.டாக்டர். J.E. அருள்ராஜ், கல்லூரி தலைமை நிர்வாகி அருட்தந்தை. செங்கோல், கல்லூரி முதல்வர் டாக்டர்.T. மேன்வேல், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.