தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி திரவியம் செவிலியர் கல்லூரியில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் சார்பில் மாணவிகளுக்கு ஹோம் நர்சிங் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு மாணவிகளுக்குச் சான்றிதழ்களை திரவியம் செவிலியர் கல்லூரி நிறுவனத் தலைவர் டி பாண்டியராஜ் வழங்கினார்
இது குறித்து மாணவிகள் கூறும்போது இந்த கிராமப் புற சுய வேலை வாய்ப்புப் பயிற்சி மூலம் ஹோம் நர்சிங் குறித்து அறிந்து பயன் பெற்றோம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்கள் உடன் கல்லூரி முதல்வர் இருபால் பேராசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்