கோவையில் புற்றுநோயில் இருந்து மீண்டோர் சந்திப்பு நிகழ்ச்சி நீலாம்பூர் பகுதியில் உள்ள ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது..

புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ,ராயல் கேர் புற்று நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் சார்பாக நடைபெற்ற இதில் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து மீண்ட நூறுக்கும் மேற்பட்டோர் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்..

இதில் பிரபல தன்னம்பிக்கை பேச்சாளர் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு பேசினார்..

அப்போது பேசிய அவர், பல் வித இன்னல்களை தாண்டி தன்னம்பிக்கை என்பதை உறுதியாக நிரூபித்த மாபெரும் சக்தி வாய்ந்தவர்கள் இங்கு அமர்ந்து இருப்பதாக தெரிவித்தார்…

தொடர்ந்து புற்று நோய் பாதித்தவர்கள் தங்களது அனுபவங்களை ரேடையில் பகிர்ந்து கொண்டனர்..

முன்னதாக இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் பற்று நோய் சிகிச்சை மருத்துவ நிபுணர் சுதாகர் ஆகியோர் பேசுகையில்,புற்று நோய் சிகிச்சையில் தற்போது நவீன தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இருப்பதாகவும்,எனவே நோயாளிகள் பக்க விளைவுகள் இல்லாமல் எளிதில் புற்று நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை தெரிவித்தனர்..

புற்று நோய் என்றாலே குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான புரிதல் பொதுமக்களிடையே இருப்பதாக தெரிவித்த அவர்,இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதால் புற்று நோய் குறித்த பயம் விலகி நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதே நோக்கம் என தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *