தாராபுரம் செய்திகள் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனியார் மண்டபத்தில் தொல் திருமாவளவன் நியமித்த தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சிறுத்தை முருகவேல் அறிமுக விழா நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் அறிமுக விழா நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய பாதுகாப்பு இயக்க மாநில துணைச் செயலாளர் வேலு சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினர். மற்றும் ஈரோடு மண்டல செயலாளர் ஜாபர் அலி மற்றும் காங்கேயம் தாராபுரம் பகுதியில் பணியாற்றி வரும் மாவட்ட துணைச் செயலாளர் ஓவியர் மின்னல் காங்கேயம் தொகுதி மாவட்டச் செயலாளர் ஜானக்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நடைபெற்ற கூட்டத்தில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளராக முருகவேல்லை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நியமனம் செய்துள்ளார். அவருடன் இணைந்து அனைத்து நிர்வாகிகளும் பணியாற்றி தாராபுரம் தனித் தொகுதி நாளை விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதியாக மாற்ற வேண்டும் என்று ஈரோடு மண்டல செயலாளர் ஜாபர் அலி சிறப்புரையாற்றினார்
துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் பேசுகையில்
தாராபுரம் தொகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று களப்பணி ஆற்றி தாராபுரம் தொகுதி உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் புதிய அமைப்புகளை உருவாக்கி 234 தொகுதிகளில் எப்படி காட்டுமன்னார் கோவில் தொகுதி சிறப்பு வாய்ந்ததாக உள்ளதோ அதேபோல் கொங்கு மண்டலத்தில் தாராபுரம் தொகுதி சிறப்புமிக்க தொகுதி அதில் களப்பணி ஆற்றி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரலாற்று இடம் பிடிக்க வேண்டும்
வருகின்ற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஓட்டு வங்கிகள் அதிகம் வாங்கி கூட்டணி கட்சியையும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர்களையும் வெற்றி பெற கட்சி பணி ஆற்ற வேண்டும் என்றும்
தாராபுரம் தொகுதி செயலாளர் சிறுத்தை முருகவேல் பேசுகையில்
வருகின்ற மே 17 தேதி நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு தாராபுரம் தொகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கலந்து கொள்வோம் தாராபுரத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை அமைத்திட அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் பணியாற்ற களப்பணி ஆற்றுவோம் என்றார்