‘வித் லவ் திரைப்பட குழுவினர் தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களிப்பு.,
டூரிஸ்ட் ஃபேமிலி படம் பாகம் 2 குறித்து அப்டேட் சொன்ன இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.!
தலைவர் (ரஜினிகாந்த்) சூப்பராக இருப்பதாக ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறும் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டினர்.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்துள்ள திரைப்படம் ‘வித் லவ்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கி உள்ளார். இதில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாகவும், அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்கள்..
இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தூத்துக்குடி, கிளியோபட்ரா திரையரங்கில் இந்த திரைப்படத்தை காண ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், இயக்குநர் மதன், கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த், நடிகை அனஸ்வரா ராஜன், தயாரிப்பாளர் ஆகியோர் வருகை வருகை தந்தனர்..
திரையரங்கில் படகுழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.. அப்போது இயக்குநர் மதன் பேசும் போது, படம் வெற்றிகரமாக போய்க் கொண்டுள்ளது. 70 ஸ்கிரின் அதிகரித்துள்ளது என்றார்..
கதாநாயகன் அபிஷன் ஜீவிந்த் கூறும் போது, நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றுவது பிடித்துள்ளது. அடுத்த படம் இன்னும் முடிவு செய்யவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெற்றி பெற்றுள்ளது.. ஆகவே அதனை இரண்டாவது பார்ட் எடுக்கவில்லை.
ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறும் போது, படம் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.. அப்பா திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளார். அப்பாவை வைத்து படம் பண்றதுக்கு அவர் பிஸியாக இருக்கின்றார். ஜெயிலர் 2 படம் வர இருப்பதாக தெரிவித்தார்.
முன்னதாக, திரையரங்கில் ரசிகர்களுடன் படக்குழுவினர் பேசினர்.. அப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தலைவர் சூப்பராக இருப்பதாக கூறும் போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் கைதட்டினர்.. மேலும், படக்குழுவினர் ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்..
பேட்டி: 1. மதன், இயக்குநர் 2. அபிஷன் ஜீவிந்த் கதாநாயகன். 3. சௌந்தர்யா ரஜினிகாந்த், ரஜினிகாந்தின் இளைய மகள்.