திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
வேளாண்-உழவர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2026 ” கண்காட்சி அரங்குகள் மற்றும் கருத்தரங்கத்தை தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டிஆர்பி. ராஜா தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் விவசாயம் சார்ந்த உபகரணங்கள் நவீன விவசாய இயந்திரங்கள், ட்ரோன் தொழில்நுட்பம், மற்றும் இயற்கை விவசாயம் வேளாண் துறையில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய இரகங்கள், வேளாண் இயந்திரங்கள், மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்கள் இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் உள்ளிட்ட வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகள் , வேளாண் கல்லூரி மாணவ , மாணவியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய தொழில்துறை அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிதாக 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கி உள்ளார்.
ஆனால் ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழக அரசு மீது தொடுக்கும் தாக்குதல் மிகவும் கொடூரமான தாக்குதல் ஒவ்வொரு நாளும் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் அதையும் தாண்டி தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கி வருகிறார் இந்தியாவே 7 சதவீதம் வளர்ச்சியில் மட்டும் தான் வளர்ந்துள்ளது.
ஆனால் ஒன்றிய அரசு வழங்கக்கூடிய நிதி பற்றாக்குறையிலும் இன்று தமிழ்நாடு தலைகுனியாமல் இந்தியாவிலேயே 11.19. சதவீத விழுக்காடு வளர்ச்சியை பெரியார், அண்ணா , கலைஞர் எல்லோரும் கற்றுக் கொடுத்த பாடத்தில் தான் தமிழ்நாடு தனித்துவம் பெற்று முதன்மை மாநிலமாக உயர்ந்து நிற்கிறது என்று இதற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.