செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அகிலி ஊராட்சி செயலாளரும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்க வட்டார தலைவருமான
ஆ.தசரதன் படத்திறப்பு நடைபெற்றது.

முன்னதாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலக சங்கம் அச்சிறுப்பாக்கம் வட்டார கிளை சார்பில் மறைந்த தசரதன் அவர்களின் குடும்பத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் தங்களின் ஆறுதலை  தெரிவித்தனர்.

அதன் பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த தசரதன் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் போது மாநில செயற்குழு உறுப்பினர் கே.பார்த்தசாரதி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.விஜயகுமார் வட்டார துணை செயலாளர்
ஆராவமுது வட்டார நிர்வாகிகள் வீரகுமார் ஏழுமலை மோகன்தாஸ் நடராஜன் அன்பரசு மணிகண்டன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *