தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள தேனி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரேசன் கடை பணியாளர்கள் ஊதிய உயர்வு,பொது விநியோகத் திட்டத்திற்கான தனித்துறை உருவாக்குதல், ஓய்வு பெற்ற நியாய விலைக் கடை பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குதல்,அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட துணைத்தலைவர் குருசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தார்.மாவட்ட செயலாளர் அய்யனார் வரவேற்புரையாற்றினார்.

நிர்வாக அமைப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ்,மாநிலச் செயலாளர்கள், காமாட்சி முருகேசன், பாண்டி,போராட்ட குழு தலைவர் நாகேந்திரன்,பிரச்சார குழு தலைவர் சுப்பிரமணி ஆகியோர் ஆர்ப்பாட்ட உரை நிகழ்த்தினர். மாநில பொருளாளர் பொன். அமைதி சிறப்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் முத்துராயர் நன்றி உரையாற்றினார். சுமார் 400 க்கும் மேற்பட்ட நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *