தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம், நீலகிரி ஊராட்சி ஏ.வி.பி. அழகம்மாள் நகர் கிளை நூலகத்திற்கு தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.


விழாவில் வாசகர் வட்ட தலைவர் தனபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர்கள் ராஜகோபாலன், ராஜவேலு, வீரைய்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நூலகர் சாரதா வரவேற்புரை ஆற்றினார். சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து குத்துவிளக்கேற்றினார்.


இந்நிகழ்வில் தஞ்சை கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், கண்ணப்பன், ராஜேந்திரன், இ.பி.செந்தில், துரை.நாகராஜன், சைவராஜ், சோமு, திருஞானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணையன், ராஜசேகர், கண்ணப்பன், ராஜமாணிக்கம், திரு நாவுக்கரசு, ரவிச்சந்திரன், திருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒப்பந்ததாரர் செல்வம் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *