ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், சுற்றுலாத் தலமான தனுஷ்கோடிக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். இதில் பாம்பன் கடலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை பாலம் வழியாகதான் வாகனங்கள் வந்து செல்ல முடியும் இதனால் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் 37 ஆண்டுகளை கடந்ததால் பாலம் பலவீனமாகி தடுப்பு சுவர்கள், சாலை சேதமடைந்துள்ளது. விரைவில் பரமக்குடி – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்க உள்ளது.
இதையடுத்து மத்திய அரசு உத்தரவுப்படி பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் தனியார் ஒப்பந்த ஊழியர்கள், பாம்பன் கடலில் புதிய பாலம் அமைய உள்ள பகுதியை கருவி மூலம் சர்வே செய்தனர்.மேலும் ராமநாதபுரம்- ராமேஸ்வரம் இடையே நிலப்பகுதியில் சர்வே எடுக்கும் பணி நடக்கிறது. இப்பணி ஓரிரு வாரத்தில் முடிந்ததும் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர்.