தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மத்திய ஒன்றிய அரசை கண்டித்து தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழைய நகராட்சி முன்பு நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தென்னரசு தலைமையில் 200க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த கலந்து கொண்டனர் அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சி கனகராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் இந்த கோசத்தில் மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்தனர்.

இதில் பேசிய முன்னாள் மாவட்டத் தலைவர் தென்னரசு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தொழிலாளர்கள் சட்டத்தை போக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்தும் பனியன் உள்ளிட்ட தொழிலாளருக்கு குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் முதலாளிகள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழகத்தில் நடைபெறும் தொழிலாளர் நல வாரியத்தை ரத்து செய்யும் நோக்குடன் செயல்படும் மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விடக்கூடாது பனியன் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது இதில் சாலை மறியல் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து சாலை மறியலுக்கு தாராபுரம் காவல்துறையினர் அனுமதி மறுப்பு தெரிவித்ததால் சாலை மறியல் கைவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் காங்கிரஸ் கட்சியின் தாகரத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிஐடியு தொழிலாளர் அமைப்புனர் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *