
சென்னையில் கிராம ஊராட்சி செயலாளர்கள் இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் இயங்கும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மாநில அளவில் 17 ஆவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்று வரும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாட்டில் உள்ள கிராம ஊராட்சிகளில் செயலாளர்களாக பணியாற்றும் தங்களை தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் 15,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இது குறித்து மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் கூறும்போது எங்களின் அமைதிப் போராட்டம் எங்களின் இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடும் வரை தொடரும் என்றார்.