பரமத்திவேலூர்
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ,பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி பரமத்தி ஒன்றிய திமுக சார்பில் வசந்தபுரத்தில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்”எனும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பரமத்தி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் பி. பி. தனராசு தலைமை வகித்தார்.
பரமத்தி தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் லலித்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில்கபிலர்மலை தெற்கு ஒன்றிய கழகப் பொறுப்பாளர் சாமிநாதன், கபிலர்மலை மத்திய ஒன்றிய கழகப் பொறுப்பாளர் வக்கீல் சரவணகுமார் ,கபிலர்மலை வடக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தளபதி சுப்பிரமணியம், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல், எலச்சிபாளையம் மத்திய ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, மோகனூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம், நாமக்கல் மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சி. எம். கண்ணன்,மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடைசுந்தர்,தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சோமசேகர், மாவட்ட துணைச் செயலாளர் வி. ஜி. அன்பழகன், பேரூர் கழக செயலாளர்கள் பொத்தனூர் கருணாநிதி,பாண்டமங்கலம் பேரூர் செயலாளர் பெருமாள் (எ) முருகவேல் ,பரமத்தி பேரூராட்சி தலைவர் மணி, பரமத்திபேரூர் கழக செயலாளர் ரமேஷ்பாபு , பரமத்திவேலூர் பேரூர் கழக செயலாளர் முருகன் , வெங்கரை பேரூர் கழக செயலாளர் தீபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ் மூர்த்தி, பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் உமாராணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளரும் , வெளிநாடு தமிழர்கள் நலவாரிய தலைவருமான கார்த்திகேயன் சிவசேனாபதி, கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், 2021 முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல மக்கள் நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது .
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஒன்னரை கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவது, தினமும் 71 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடையும் விடியல் பயணம் திட்டம், கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்படும் திட்டம் ,மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் சமூக மாற்றத்தை உருவாக்கி உள்ளது. .
ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு காட்டுகிறது. இருப்பினும் அனைத்து நெருக்கடிகளையும் தாண்டி தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நலனில் அக்கறை காட்டி செயல்படும் தலைவராக முதலமைச்சர் விளங்குகிறார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைய வேண்டுமென வலியுறுத்திய அவர், “ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்” எனக் கூட்டத்தில் முழக்கமிட்டார்.
மேலும் இக்கூட்டத்தில் ,மாவட்டத் துணைச் செயலாளர் , சாந்தி, பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், சார்பு அணி நிர்வாகிகள் கிரிசங்கர், அம்பிகா பாண்டியன் மற்றும் மாவட்ட, ஒன்றிய ,பேரூர், கிளைக் கழக பொறுப்பாளர்கள் ,பல்வேறு அணி பொறுப்பாளர்கள் ,மகளிர் அணி பொறுப்பாளர்கள் என சுமார் 1000 க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வசந்த புரம் சத்யராஜ் நன்றி கூறினார்.