தூத்துக்குடியில் 3 இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்.


தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. அதில் சில முக்கிய இடங்களில் பொதுமக்கள் அமா்ந்திருந்து பேருந்துகள் வரும் நேரங்களில் செல்வதற்கு ஏதுவாக தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டுநிதி மற்றும் சில பங்களிப்புகளுடன் கடற்கரை சாலை, அரசுமருத்துவமணை நா்ஸிங் கல்லூாி அருகில் குளிரூட்டப்பட்ட பேருந்துநிறுத்தம், மீளவிட்டான் சில்வா்புரம் லூசியா, இல்லம் அருகில் ஆகிய 3 இடங்களில் அமைக்கப்பட்ட புதிய நிழற்குடையை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துைற அமைச்சா் கீதாஜீவன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து இனிப்புகள் வழங்கினாா்.


நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், என்டிபிஎல் பவா் லிமிடெட் இயக்குநா் அனந்த ராமானுஜம், பொதுமேலாளர் சரவணன், துணை மேலாளர் ரகுபதி, மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மேகநாதன், சிவக்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூாிதங்கம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சின்னத்துரை, மாநகர விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆரோக்கிய ராபின்சன், வா்த்தக அணிஅமைப்பாளா் ஆனந்தசேகா், வக்கீல்கள் குபோ்இளம்பாிதி, ரூபராஜா, பிரவீன்குமாா், கவுன்சிலா்கள் விஜயலட்சுமி, விஜயகுமாா், காந்திமதி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், மகளிா் அணி துணை அமைப்பாளர் கலா, பெருமாள் கோவில் அற்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *