தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா, கடந்த6-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று சக்தி கரகம் அழைத்து வந்து, குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி மைதானத்தில் பூ மிதி விழா நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் பக்தர்கள் ஏராளமானோர் குண்டத்தல் இறங்கினர்.

பின்னர் அக்னி குண்டத்தில் பக்தர்கள் உப்பு மிளகு உள்ளிட்டவற்றை போட்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வகையில் கோயிலுக்கு முன்பு தரையில் நீண்ட வரிசையில் படுத்தனர். சக்தி கரகம் எடுத்து வந்த பூசாரி தரையில் படுத்து இருந்த பக்தர்கள் மீது ஏரி மிதித்தவாறு சென்றார். . இதனை அடுத்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு தீபா ஆராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *