அலங்காநல்லூர் –

மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மண்டபத்தில் தானம் அறகட்டளை, மதுரை கிராமப்புற மண்டலம், பாலமேடு வட்டார களஞ்சியம் மற்றும் சுகம் அறக்கட்டளை இணைந்து வளரிளம் பெண்களுக்கான முன் மாதிரி கல்வியாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது 350 வளர் இளம் பெண்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகரத்தினம், பாலமுருகன்,சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் வினோதினி, வட்டாரம் மற்றும் பயிற்சி நோக்கம் பற்றி விளக்கினார். மதுரை கிராமப்புறமண்டல சுகாதாரதிட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, முன்மாதிரி கல்வியாளர் பொறுப்புகள் பற்றி கூறினார். யோகா பயிற்சியாளர் விஜயலட்சுமி,
வளரிளம்பெண்களுக்கு திறன்மேம்பாட்டு யோகா சொல்லிக் கொடுத்தார். வளரிளம் பெண்கள் குழு பொறுப்பாளர்களின் பொறுப்பு தொடர்பாக பால்சாமி பயிற்சி அளித்தார். பயிற்சிக்கான ஏற்பாட்டினை பயிற்சியாளர் மற்றும் தலைவிகள் இணைந்து செய்திருந்தனர்.
சுகம்வட்டார சுகாதார பணியாளர் சித்ராமற்றும் அனுசியா வரவேற்புமற்றும் நன்றி தெரிவித்தனர். மேலும் மண்டல சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்
முத்தையா வளரிளம் பெண்களுக்கான சுய சுகாதாரம் இரும்பு சத்து நிறைந்த ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் நல்ல தொடுதல் தவறான தொடுதல் குறித்து விழிப்புணர்வு குறித்துபேசினார்.
சுகம் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்ஸ் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்கள், (குறைந்த செலவில் தரமான பயிற்சியுடன் கூடிய கல்வி, படிப்புகளின் வேலைவாய்ப்பு வசதி. இரண்டாம் வருடம் முதல் உதவி தொகை எனக் கூடிய வேலை வாய்ப்பு, செவிலியர் பயிற்சி சேர்ந்த தகுதியுடன் கூடிய ஆசிரியர் மற்றும் மருத்துவ வல்லுனர்களின் வழிகாட்டுதல்கள்.)
மெடிக்கல் லேபரேட்டரி
டெக்னீசியன்,எக்ஸ்ரே டெக்னீசியன்,அறுவை சிகிச்சை அரங்கு டெக்னீசியன் மருந்தாளுனர் உதவியாளர், செவிலியர் உதவியாளர், பட்டய படிப்பு மதுரை சுகம் சிறப்பு மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்கள் பயிற்சி சமுதாய சுகாதாரத் திட்டங்களில் மக்களுடன் இணைந்து தங்கி பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக எடுத்துக் கூறப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *