தேனியில் உலகம் உங்கள் கையில் மடிக்கணினி வழங்கல்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணக்குமார் ஆகியோர் முன்னிலையில் மடிக்கணினிகளை வழங்கினார்கள்
மாணவர்களின் கைகளில் எதிர்காலம் உள்ளது என்பதையும் அதை மேம்படுத்தும் விதமாக இன்றைய இளைய தலைமுறை யின் திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்துக்காக அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் உலகம் உலகம் உங்கள் கையில் திட்டம் தமிழக முதல்வரால் கடந்த 05.01.2026. அன்று தொடங்கி வைக்கப்பட்டது
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசு அரசு நிதி உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மடிக்கணினிகளை வழங்கினார். தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 10.469. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர்கள் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் சின்னமனூர் அய்யம்மாள் ராமு கம்பம் வனிதா நெப்போலியன் கூடலூர் பத்மாவதி லோகந்துரை தேனி நகராட்சி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் வீரபாண்டி கீதா சசி பழனிசெட்டிபட்டி வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி பூதிப்புரம் கவியரசு பால்பாண்டியன் மேல சொக்கநாதபுரம் கண்ணன் காளி ராமசாமி தேவாரம் லட்சுமி பால் பாண்டி கோம்பை முல்லை மோகன் ராஜா ஒடைப்பட்டி வழக்கறிஞர் தனுஷ்கோடி அனுமந்தன் பட்டி ராஜேந்திரன் கம்பம் புதுப்பட்டி சுந்தரி பாஸ்கரன் பண்ணைப் புரம் லட்சுமி இளங்கோ மார்க்கையன்கோட்டை ஒ.ஏ.முருகன் குச்சனூர் பி.டி. ரவிச்சந்திரன் தென்கரை வே. நாகராஜ் தாமரைக்குளம் ச. பால்பாண்டி வடுகபட்டி சி நடேசன் காமய கவுண்டன்பட்டி வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்