பனை மரங்களை வெட்டுவதை தடைசெய்து தடுக்ககோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் திருப்புல்லாணி ஒன்றிய பகுதிகள் சிக்கல் தொண்டி திருவாடானை பகுதிகளிலும் ரியல் எஸ்டேட் மற்றும் செங்கல் சூளைகளுக்காக பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவது அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

பனை மரம் மாநில மரமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பனைமரங்கள் அதிகமாக இருந்தது தற்போது மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதியின்றி வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது;

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மரம் வெட்டப்பட்டால், ஈடாக 10 பனை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்பது விதி . பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியர் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதிஅவசியம். அனுமதியின்றி வெட்டப்படும் பனை மரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வெட்டுபவர்கள் மீது சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

இராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கிராமக்களில் அனுமதியின்றி இயந்திரங்கள் கொண்டு பனை மரங்களை வெட்டும் செயல்கள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆகவே மாவட்டஆட்சியர் தூரித நடவடிக்கை எடுத்து பனைமரத்தை காக்கவேண்டும் என இந்தபகுதி பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *