கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (KASCARNIVAL 2K26- ) காஸ் கார்னிவல் 2026 எனும்
பண்பாடு மற்றும் திறன் திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது…

கல்லூரி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற இதில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

முன்னதாக விழாவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குனர் சி.ஏ.வாசுகி துவக்கி வைத்தார்..

கல்லூரி மாணவர்களின் பன்முக திறமைகளை வெளிக்கொணரும் விதமாக நடைபெற்ற மேடை நிகழ்ச்சிகளில் தனிநபர் நடனம், குழு நடனம், தனிநபர் பாடல், குழு பாடல், மைம், அட்சாப் (Adzap), டப்ஸ்மாஷ் போன்ற 14 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் உற்சாகமான நடனங்களாலும் இனிமையான பாடல்களாலும் பார்வையாளர்களை கவர்ந்தனர்..

மேலும் மாணவர்களின் பகுத்தறிவு சிந்தனை, குழு பண்பு, கலைநயம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை சோதிக்கும் வகையில்,வினாடி வினா, போஸ்டர் வடிவமைப்பு, புகைப்படம், ரங்கோலி மற்றும் புதையல் வேட்டை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன..

இதில் சிறந்த குழு மற்றும் தனி நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன…

விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சியில் பிரபல சூப்பர் சிங்கர் புகழ் புன்யா கலந்து கொண்டு மேடையில் பாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *