தேனி மாவட்ட கலெக்டர் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சிறப்பு தீவிரத்திருத்தம் 2026 பணிகளில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி பெரியகுளம் தனி போடிநாயக்கனூர் கம்பம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19.12.2025 ஆம் தேதி யன்று வெளியிடப்பட்டது
இதனைத் தொடர்ந்து 23.02.2026. தேதியன்று தேனி மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் இடம் பெற்றிருக்கும் வாக்காளர்களின் விபரம் வருமாறு ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24591. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29928 இதர வாக்காளர்கள் 30 எ என்று மொத்தம் 2 லட்சத்து 54.549 வாக்காளர்களும் பெரியகுளம் தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 28.368. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35.070 வாக்காளர்கள் இதர வாக்காளர்கள் 109 என முத்தம் 2 லட்சத்து 63.547. வாக்காளர்களும் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 26.856 பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34.760 வாக்காளர்கள் இதர வாக்காளர்கள் 15 என்று மொத்தம் 2 லட்சத்து 61.631 வாக்காளர்கள் கம்பம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.லட்சத்து 22.496. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31.129. வாக்காளர்கள் இதர வாக்காளர்கள் 21 இன்று மொத்தம் 2 லட்சத்து 53.646 வாக்காளர்கள் உள்ளனர் இன்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல்கள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும் மேற்கண்ட இடங்களில் பொதுமக்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சரியான விபரத்துடன் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் மேலும் வாக்காளர் பட்டியல் விவரங்களை https //voters.eci.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். மேலும் 23.02.2026.ஆம் தேதி முதல் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் படிவம் 6 /நீக்கல் படிவம் 7/ திருத்தம் படிவம் 8/ உள்ளிட்ட படிவங்களை வாக்காளர் பதிவு அலுவலர் உதவிழ வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் https .// Voters .eci.gov.in. என்று இணையதள முகவரி வாயிலாகவும் மற்றும் voter helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார் வாக்காளர் பதிவு அலுவலர் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத்பீடன் வாக்காளர் பதிவு அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் வரலையா வாக்காளர் பதிவு அலுவலர் உதவியும் வருவாய் கோட்டாட்சியர் செய்யது முகமது வாக்காளர் பதிவு அலுவலர் தனி துணை ஆட்சியர் கவிதா தாசில்தார்கள் தேர்தல் சுருளி மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்