தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மகாராணி கலை அறிவியல் கல்லூரி,26 வது ஆண்டு விழா.

தாராபுரம், மகாராணி கல்வி நிறுவனங்களின் 26ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி தலைவர் வி.கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கிவைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் சு.தமிழ்ச்செல்வி வரவேற்புரை வழங்கினார்

தொடர்ந்து நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலாளர் NAH.சுலைமான் தலைமையுரை ஆற்றினார். துணைத் தலைவர் எம்.ஆர்.தமிழரசன், பொருளாளர் .கே.சுப்பிரமணியம், இணைச்செயலாளர் . ஜீ.எஸ்.சிராஜுதீன், இயக்குனர்கள் என்ஏஎச்.அப்துல் ரகுமான்,ஏ.முகமது அப்துல் காதர், . ஏ.சி.கார்த்தி அரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்புஅழைப்பாளர் . தாராபுரம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் மாணவர்கள் கல்லூரி படிப்பை சிறப்பாக முடித்து நல்ல வேலைவாய்பை பெற்று நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக, நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார்.

தன்னம்பிக்கை பேச்சாளர் சாந்தம்மை பிரியா கலந்து கொண்டு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார் தொடர்ந்து மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிறைவாக நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *