மன்னார்குடி.,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் உள்ள டைனி டாட்ஸ் மழலையர் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக அறிவியல் கண்காட்சி இன்று நடைபெற்றது.
இதில் 4 மற்றும் 5 ஆம் வகுப்புகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 30கும் மேற்பட்டோர் பல்வேறு அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். குறிப்பாக மழை அறியும் கருவி, ஒருங்கிணைந்த விவசாய பண்ணை, இயற்பியல் கோட்பாடுகளுக்கான செயல்முறை விளக்கங்கள் , மனித உடல் பாகங்களின் செயல்பாடுகள் என பல்வேறு தலைப்புகளில் பலவிதமான மாதிரிகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் வெங்கட்ராமன், தாளாளர் விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.