திருத்துறைப்பூண்டி., பிப்.28

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகராட்சி வளாகத்தில் நடைபெற்ற தஞ்சை சமவெளி நாகரிகம் எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் நாகை எம்பி செல்வராஜ் , திருத்துறைப்பூண்டி எம் எல். ஏ மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வரலாற்று நூல்களை வெளியிட்டார்*

தஞ்சை சமவெளி வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனர் இடையூர் மணிமாறன் அவர்களின் பெரும் முயற்சியில் 1799 – ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்த ஒன்று பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின் சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான ஆற்றல் மிகு பேராளுமைகள் பற்றிய வரலாற்றுக் கலைக்களஞ்சியமாக “தஞ்சைச் சமவெளி நாகரிகம் வரலாற்று ஆவணக் கருவூலம்” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ள ஐந்து தொகுதிகள் ஐம்பெரும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் நகர் மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறிப்பாக தஞ்சை மண்ணில் பிறந்த மிகப்பெரிய ஆளுமைகளாக தமிழகத்தில் மட்டுமல்லாது உலகத்திலேயே சிறந்து விளங்கிய

திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், என பல்வேறு தரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தஞ்சை மண்ணில் பிறந்தவர்கள் என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு செய்து அதை நூலாக தயாரித்து ஐந்து நூல்களாக வெளியிட்டு அதன் அறிமுக விழா இன்று நடைபெற்றது.

இதில் ஆய்வு மேற்கொண்டு நூலை எழுதிய பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தஞ்சை சமவெளி நாகரிக வரலாற்று ஆய்வு மையத்தின் நிறுவனர் இடையூர் மணிமாறன் வரவேற்று பேசினார்.
இதில் ஆயிரக்கணக்கான ஆளுமைகளின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட்டு வியந்தனர். இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ் கலந்துகொண்டு புகைப்படங்களை கண்டு ரசித்தனர் .

இந்த பிரபலம் நமது மண்ணில் பிறந்தவர் என அனைவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பேசிக்கொள்ளும் சூழல் ஏற்படுத்தி உள்ளது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ஆளுமையாளர்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நாகை எம்பி செல்வராஜ் புத்தகத்தை வெளியிட அதனை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் நகர மன்ற துணைத் தலைவர் ஜெயபிரகாஷ். ஏ ஆர் வி குழுமத்தின் நிறுவனர் ஏ ஆர் விவேக், பாலா, செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் நூலகர் ஆசிரியை தம்பி நன்றியுரை ஆற்றினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *