திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் பழனியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த மணியரசன், பிப்ரவரி 28 அன்று நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகே சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநரிடம் கொள்ளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.