தேனி மாவட்டம் கம்பம் நகரில் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் நிகழ்ச்சி மற்றும் ஹாமித் CONSTRUCTION சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கம்பம் கம்பம் மெட்டு காலனியில் ஹாமிது அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்எல்ஏ முன்னிலையில் ஹாமிது அன்சாரி தலைமையில் அண்ணா திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் உங்கள் இணைத்துக் கொண்டனர். புதியதாக இணைந்த அனைவருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு HAMEED CONSTRUCTION சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் கூடலூர் செல்வேந்திரன் சுப்பிரமணியம் அய்யர் அபுதாகிர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நகர நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.