தனியார் நிதி நிறுவன கெடுபிடி: பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
திருவாரூர் ஜூலை 22 திருவாரூர் அருகில் மணக்கால் பகுதியில் வசிக்கும் செந்தில்குமார் 50 இவர் இதே பகுதியில் பெயிண்டராக பணிபுரிகிறார் இவருக்கு வெண்ணிலா 46 என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர் செந்தில்குமார் தனது தொழிலை விரிவுபடுத்தும் நோக்கில் மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் நிதி நிறுவனங்களில் 40 லட்சத்திற்கு மேற்பட்ட தொகையை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது கடன் வாங்கிய தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர் கட்ட தவறியதை அடுத்து அந்த தனியார் நிதி நிறுவனம் ஊழியர்கள் சில நாட்களாகவே செந்தில்குமாரை பணம் கட்ட சொல்லி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது, ஆனால் தற்போது பணம் இல்லை என்பதால் சிறிது காலம் அவகாசம் கொடுக்குமாறு செந்தில்குமார் கேட்டபோது பொது இடத்தில் வைத்து அனைவரும் முன்னிலையிலும் அநாகரிக வார்த்தைகளை கூறி நிதி நிறுவன ஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை செந்தில் வீட்டுக்கு சென்ற ஊழியர்கள் அவரை ஆபாச வார்த்தைகளால் பேசி வீட்டை புட்டுகிற அளவுக்கு வன்முறையாக நடந்து கொண்டனர்
எனக் கூறப்படுகிறது, இதனால் மணமடைந்த செந்தில்குமார் களைக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை முயற்சி செய்தார் அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை முன்பு ஒன்று திரண்டு தற்கொலைக்கு காரணமான மூன்று நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு சமாதானப்படுத்திய போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை எடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர் நிதி நிறுவன ஊழியர்கள் கண்டிப்பு செயலால் ஒரு உயிர் பலியானது அப்பகுதியை சோகத்தில் காணப்பட்டது,