வலங்கைமான்., மார்ச்.01
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78- வது பிறந்த நாளை முன்னிட்டு நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமானில் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற “நன்னிலம் எம்எல்ஏ கோப்பை”-க்கான வாலிபால் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் இரா.காமராஜ் மற்றும் வலங்கைமான் நண்பர்கள் வாலிபால் விளையாட்டு கழகம் இணைந்து நடத்திய இப்போட்டியில் சர்வதேச வாலிபால் விளையாட்டு வீரர்கள் அங்கமுத்து, முத்துசாமி உள்ளிட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டியில் சென்னை இந்தியன் வங்கி, சென்னை ஐ. சி. எப், சென்னை வணிகவரி மற்றும் வலங்கை நண்பர்கள் குழுக்களை சார்ந்த சர்வதேச விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
மின்னொளி அரங்கில் நடைபெற்ற இரண்டு நாள் வாலிபால் விளையாட்டு போட்டியை அதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளரான முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடம் பெரும் அணிக்கு “நன்னிலம் எம்எல்ஏ கோப்பை” மற்றும் ஒரு லட்ச ரூபாய் தொகையும், இரண்டாம் இடம் பெறும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாய் தொகையும், மூன்றாம் இடம் பெறும் மணிக்கு 50,000 ரூபாய் தொகையும், நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூபாய் 25 ஆயிரம் தொகையும் பரிசுகளாக வழங்கப்பட்டது.
மேலும் சிறந்து விளையாட்டு வீரர்களுக்கும் ஆறுதல் பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டு நடைபெற்ற விளையாட்டு போட்டியில் சென்னை இன்கம் டேக்ஸ் அணியினர் முதல் இடம் பெற்றனர்.
சென்னை ஐ.சி.எப் அணியினர் இரண்டாம் இடம் பெற்றனர். சென்னை வைஷ்ணவா கல்லூரி அணியினர் மூன்றாம் இடம் பெற்றனர். வலங்கை நண்பர்கள் அணி நான்காம் இடம் பெற்றது. மேலும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் எம்எல்ஏ வழங்கினார். இப்போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளில் நிகழ்வில் தமிழ்நாடு மாநில வாலிபால் விளையாட்டு கழகத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஜே. மார்ட்டின் சுதாகர், தமிழ்நாடு மாநில வாலிபால் விளையாட்டு கழக பொருளாளர் எம்.பி செல்வகணேஷ், திருவாரூர் மாவட்ட வாலிபால் விளையாட்டு கழகத்தின் செயலாளர் கே. ஜி. சீலன் மற்றும் சரவணன், வலங்கை நண்பர்கள் விளையாட்டு கழக பொறுப்பாளர்கள் விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.