திருவாரூர்., மார்ச்.01

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தென்னக ரயில்வேக்கு கீழ் இயங்கும் திருச்சி கோட்டத்தில் உள்ள திருவாரூர் ரயில் நிலையம், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்கப்பட்ட நிலையில் இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சியில் இருந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தினர் மாணவர்கள் என 600க்கும் மேற்பட்டோர் தனி ரயிலில் திருவாரூர் வந்து சேர்ந்தனர்.

பாரதப் பிரதமரின் இந்த நிகழ்ச்சிக்கு செய்தியாளர்களுக்கென இரண்டு வரிசையில் ஆறு சீட்டுகள் மட்டும் ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த ஆறு இருக்கைகளிலும் செய்தியாளர்களை தவிர மற்ற அனைவரும் அமர்ந்து கொண்டு செய்தியாளர்கள் வெளியே வெயிலில் காக்க வைக்கப்பட்டுள்ளனர்.

இது மட்டுமல்லாமல் பாரத பிரதமரின் நிகழ்ச்சியில் முன் வரிசையில் அமர்ந்திருக்கும் ரயில்வே உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியை கண்டு களிக்காமல் தூங்கிக் கொண்டு இருந்தது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *