பேராவூரணி, மார்ச் 1-
தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தமிழ்நாடு பாரத பண்பாட்டு கேந்திரம் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் கேந்திரங்கள் சார்பில் கல்லூரி மாணவிகளுக்கு பண்பாட்டு கருத்தரங்கம் நடந்தது.
சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் கனிமொழி, மூத்த மகப்பேறு மற்றும் மகளிர் நோய் நிபுணர் டாக்டர் நளினிசகிகுமார், தேசவளர்ச்சியில் தொழில்நுட்ப தகவல் தொடர்பு மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, மாணவிகள் கல்வியுடன் கூடிய பண்பாட்டு விழிப்புணர்வும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நமது மரபு மற்றும் மொழியை பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் கடமை என்பதையும் வலியுறுத்தினர். மேலும், பெண்கள் சமுதாய முன்னேற்றத்தில் முக்கிய பங்குகளை வகிக்கினர்.
இக்கருத்தரங்கம் இளம் தலைமுறையினரிடம் இந்திய பாரம்பரியம், பண்பாடு மற்றும் மதிப்புணர்வுகளை வலியுறுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. பாரதத்தின் தொன்மையான பண்பாடு, குடும்ப மதிப்புகள், சமூக ஒற்றுமை, பெண்களின் மரபு மற்றும் சமூகப் பங்கு குறித்து விளக்கமளித்தனர்.
கருத்தரங்கத்தில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில் ஆர்.எஸ்.எஸ், பாஜ பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை கேந்திர பொறுப்பாளர் செல்வராசு, சுந்தர்ராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்