திருத்துறைப்பூண்டி., மார்ச் 01
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழக முழுவது பல்வேறு இடங்களில் திமுவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு போக்குவரத்து கழக சார்பில் தொ.மு.ச அருணகிரி தலைமையில் இன்று கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் தமிழக முதல்வர் பிறந்த நாளை கொண்டாடினர்.
இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் ஆர். எஸ்.பாண்டியன் மற்றும் திமுக நகர கழக நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் பலர் கலந்து கொண்டனர்.