கூவத்தூர் கிராமத்தில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா
புதுப்பட்டினம், மார்ச் 2
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்விழா செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே. இராஜி தலைமையில் நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கூவத்தூர் கிளைச் செயலாளர் எஸ்.கோவிந்தசாமி, எம்.எஸ்.கோவிந்தசாமி, வி.விஜயகுமார்,இ. அருணா,எஸ்.சுதாகர், ஜி.சிவா,ஜி.யுவராஜ், ஜி.சதிஷ்,எஸ்.தனசேகர், கே.பி முருகன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்