திருத்துறைப்பூண்டி.,
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகர திமுக சார்பில் திருத்துறைப்பூண்டி சாமியப்பா நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் திமுக நகர செயலாளர் ஆர் எஸ் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும் பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோட்டூர் ஒன்றிய செயலாளர் பால.ஞானவேல் மற்றும் ஒன்றிய நகர மற்றும் இளைஞர் அணியினர் ஏராளமானோர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.