எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மையத்தில் பறக்கும் படை ஆசிரியர் மாரடைப்பில் உயிரிழப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆனைக்காரன்சத்திரம் சந்த படுகை கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (.58). ஆயங்குடி பள்ளம் வெங்கடேசா மேல்நிலைப் பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று தொடங்கிய பிளஸ் 2 தேர்வுக்கான பறக்கும் படை அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளார். காலை சீர்காழியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தேர்வு அறையில் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது ஆசிரியர் சரவணன் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் சக ஆசிரியர்கள் அவரை சிகிச்சைக்காக வாகனத்தில் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஆசிரியர் சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அஞ்சலி செலுத்திய பின்னர் சரவணன் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.

தேர்வு அறையில் ஆசிரியர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *