வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

*சமூக நீதி எனக் கூறிக்கொள்ளும் திமுகவின் சமூக நீதி இல்லை.
ஜாதியை பார்த்து பதவி வழங்குவதால் மன அழுத்தத்திற்கு ஆளான தொண்டர் தோட்டனுத்து ராதாகிருஷ்ணன். புதிதாக கட்சி துவங்கி வருகின்ற 2026 தேர்தலில் திமுகவிற்கு எதிராக போட்டி.

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 32 ஆண்டுகளாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து திமுக கட்சி பணியாற்றி வருகிறார்.

மேலும் இவரது மனைவி சித்ரா தோட்டனுத்து ஊராட்சி மன்ற தலைவியாகவும், ராதாகிருஷ்ணன் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் 2011 இல் திமுக ஒன்றிய செயலாளர் தேர்தல் வரும் பொழுது மாவட்ட செயலாளர்
ஐ.பி.செந்தில்குமார் அப்பகுதியில் உள்ள செழியன் என்பவரை ஒன்றிய செயலாளராக தேர்வு செய்து விடுகின்றனர்.

அதன் பிறகு 2021ல் ஒன்றியத்தினை மீண்டும் 2 ஒன்றியமாக பிரிக்கும் பொழுதும் ராதாகிருஷ்ணனை விட்டு விட்டு, வேறு இருவருக்கு மீண்டும் ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்படுகிறது. அப்பொழுது திமுக மாவட்டம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை மூன்று ஒன்றியங்களாக பிரிக்கப்படும் பொழுதும் 32 ஆண்டு காலமாக திமுகவிற்கு பணியாற்றிய ராதாகிருஷ்ணனை பதவி வழங்காமல், ஜாதி அடிப்படையில் திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகம் நிராகரித்து விட்டது. மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான ராதாகிருஷ்ணன் சமூக நீதி, சமூக நீதிக் கொள்கை என பேசிக்கொள்ளும் திமுகவில் சமூக நீதி இல்லை. ஜாதி பார்த்து பதவி வழங்குவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் வேதனை தெரிவித்தார் .மேலும் அதிக சம்பளம் வாங்கும் கொத்தனாரை விட குறைந்த சம்பளம் வாங்கும் சித்தாலுக்கே திமுகவில் மதிப்பு என உதாரணமாக எடுத்துக்காட்டினார். திமுக மற்றும் திமுகவினரால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக வருகின்ற 2026 தேர்தலில் புதிதாக கட்சி ஆரம்பித்து திமுகவிற்கு எதிராக போட்டி போட உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் தனது கட்சி பெயரான வெற்றித் தமிழர் முன்னேற்ற கழகம் எனவும் அதற்கான கட்சி கொடியினையும் அறிமுகம் செய்தார். திமுக உட் கட்சி காரணமாக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுகவில் 32 ஆண்டு காலம் கட்சி பணியாற்றிய தொண்டன் மனவேதனையில் புதிதாக கட்சி துவங்கி இருக்கும் சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேட்டி : G.ராதாகிருஷ்ணன்-
நிறுவனத் தலைவர்,
வெற்றித் தமிழர்முன்னேற்றக் கழகம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *