தேனி மாவட்டம் கம்பம் நகரில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஊழல் லஞ்சத்துக்கு எதிரான கையொப்ப இயக்கம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊழல் லஞ்சத்துக்கு எதிரான பலகையில் தனது முதல் கையெழுத்தை போட்டு துவக்கி வைத்தார்
கம்பம் சிக்னல் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கம்பம் நகர காங்கிரஸ் தலைவர் கே சி போஸ் தலைமை தாங்கினார் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழக வெற்றி கழக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முதல் கையொப்பமிட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா முஹம்மது மதிமுக மாவட்ட செயலாளர் வி எஸ் கே ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் லெனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் கல்யாண சுந்தரம் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர்கள் கவிஞர் பாரதன் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற லஞ்ச ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி கையொப்பமிட்டனர்.