அரியலூர்,ஜூலை 20:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 1.4.2023 அன்று பதிவாளர் விதிக்கப்பட்ட முதல் ஊதிய உயர்வு நிபந்தனைகளால், 40 சதவீதசங்கங்களில் புதிய ஊதியம் அனுமதிக்க இயலாத நிலை உள்ளதை கருத்திக் கொண்டு, நிபந்தனைகள் அனைத்தையும், தளர்த்தி அனைத்து சங்கங்களுக்கும் புதிய ஊதிய உயர்வு முழுமையாக வழங்கிட வேண்டும்.
1.4.2023}க்கு பின்னர் ஓய்வுப் பெற்றவர்களுக்கும் புதிய ஊதியம், நிலுவைத் தொகையுடன் அனுமதிக்கப்பட வேண்டும்.
பணி ஓய்வுத் தினத்தன்றே ஓய்வு கால நிதிப்பயன்கள் முழுமையாக வழங்கிட வேண்டும். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.
தாயுமானவர் திட்டத்தில், விற்பனையாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு நடைமுறைச் சிரமங்களை கலைந்து மனநிறைவோடு பணி பார்க்கும் வகையில் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டும். அனைத்து பணியாளக்களுக்கும் மாவட்ட அளவில் பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் பாரபட்சமற்ற வகையில்பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சங்கங்களில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் கணினி பணியாளர்கள் அனைவரையும் சிறப்பு தேர்வு மூலம் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.சக்திவேல், பொருளாளர் இளவரசு, துணைத் தலைவர்கள் பாலமுருகன், மணிகண்டன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
படவிளக்கம்: அரியலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர்.