மார்ச் -03
திருச்சி மாவட்டம் துறையூர் எம்எஸ்கே திருமண மண்டபத்தில் 02-03-2026 அன்று மாலை 6மணியளவில் துறையூர் தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.துறையூர் நகர தலைவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் இ எம் சரவணன் கலந்து கொண்டு துறையூர் நகரம் மற்றும் ஒன்றிய வார்டு தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.இதில் மாவட்ட துணை தலைவர் (இளைஞர் காங்கிரஸ் ) ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் பிரபாகரன், திருமூர்த்தி, மீசை பாண்டியன், டிவி கண்ணன், அரவிந்தன்,மாணிக்கம், செல்வராஜ்,பிரீஸ் சரவணன் பெரியசாமி, அஸ்வின் குமார், நாகராஜ், மணிகண்டன், குருசாமி, இளவரசி மற்றும் துறையூர் நகர, வட்டார நிர்வாகிகள் துறையூர் உப்பிலியபுரம் ஒன்றிய காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்