கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பாஜக-வின் தெரு முனை பிரச்சாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் மலர
மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எல் ஏ, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS- யின் சீரிய திட்டமிடலில் நாளை நமதே தமிழ்நாடும் நமதே
தெருமுனை பிரசார கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது.
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள 13 சக்திகேந்திரங்களிலும் நடத்தப்பட்டு இறுதியாக தெருமுனை பிரச்சார நிறைவு விழா கிருஷ்ணராயபுரம் பாரத ரத்னா வாஜ்பாய் திடலில் ஒன்றிய தலைவர் சகோதரர் கவுன்சிலர் கோபிநாத் செல்வம் தலைமையில் சக்திகேந்திர பொறுப்பாளரும் ஒன்றிய பொருளாளர் பிரித்திவி ரவி முன்னிலையில் நடைபெற்றது.
பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விடியாத திராவிட மாடல் ஆட்சியின் அபாயகரமான நாட்களை நினைவு கூர்ந்தும், தேசிய ஜனநாயக கூட்டணி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டார்.
இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தினை 100% இந்த ஒன்றியத்தில் நடத்த கடுமையாக கடந்த 11 நாட்களாக பணி செய்த மண்டல தலைவர், மண்டல நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் சார்பாகவும் சட்டமன்ற அமைப்பாளர் என்ற வகையில் எனது சார்பாகவும் நன்றியுடன் கூடிய வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.என பாஜக கரூர் மாவட்ட செயலாளர் காவேரி மோகன் ராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் டைம்ஸ் சக்தி,மாவட்ட கலை கலாசார பிரிவு தலைவர் முருகானந்தம் கருப்பண்ணன் , உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் ரகுபதி, விவசாய அணி மாவட்ட துணை தலைவர் கலாமணி வேல்முருகன், அஇஅதிமுக கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் பாரி, அதிமுக நகர செயலாளர் இராஜா, பா.ஜ.க மண்டல பொதுச்செயலாளர்கள் வழக்கறிஞர் வடிவேல், விஜயகுமார்,மண்டல துணை தலைவர்கள் தியாகு நல்லு,சுரேஷ் குமார்,வரதன், விஜயலட்சுமி, வழக்கறிஞர் செல்வி மாலதி,மண்டல செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மாவட்ட தலைவர் பேசுகையில் நம் அனைவரது கடுமையான உழைப்பும் நிச்சயமாக இந்த திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் இருந்து தமிழகத்திற்கு விடியலை கொடுக்கும் விதமாக இந்தமுறை கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் 30000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதை உறுதி செய்யும் என கூறினார். இக்கூட்டத்திற்க்கு அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.