புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் உள்ள தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்துகொண்டு, பள்ளியில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், வாத்து நடை ஓட்டம், கங்காரு நடை ஓட்டம் , லெமன் அண்ட் ஸ்பூன், கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, மற்றும் நீர் நிரப்பும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசினை வழங்கினார்.

விழாவிற்கு பொறுப்பாசிரியை வி. வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் இரா. ஆனந்தராஜ் வரவேற்புரை வழங்கினார். முடிவில் ஆசிரியை மனோரஞ்சிதம் நன்றி உரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *