புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி வில்லியனூர் கண்ணதாசன் நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் உள்ள குறுக்குத் தெருக்களுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் மேற்கொள்ளப்பட உள்ள பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, சாலை அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவிப் பொறியாளர் சத்தியநாராயணா, ஊர் முக்கியஸ்தர்கள் முருகையன், ரஜினிமுருகன், கலைமணி, கணபதி, மூர்த்தி, ஜெகன், சூர்யா, விக்கி, சாமுண்டீஸ்வரி, வாணி, காவேரி, சாந்தி, திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ரமணன், மாநில துணை அமைப்பாளர்கள் சரவணன், ராமதாஸ், செயற்குழு உறுப்பினர் சுப்ரமணி, கிளைக் கழக நிர்வாகிகள் மிலிட்டரி முருகன், சொக்கலிங்கம், கார்த்திகேயன், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.