புதுச்சேரி, மார்ச் 4: புதுச்சேரி உப்பளம் பகுதியில் உள்ள புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்றம் மற்றும் திருப்பலி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு திருப்பலியில் முழுமையாக பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.
நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு கொடி ஏற்றதை கண்டு பிறதனை செய்து திருவிழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்வில் திமுக உப்பளம் தொகுதி துணை செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் செல்வம், இருதயராஜ், ராகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.