ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி சார்பாக இரத்த தானம், ,கல்வி மற்றும் மருத்துவ உதவி,சாதனையாளர்களை ஊக்குவித்து விருது வழங்குவது என பல்வேறு சமூக நல பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்..
இதன் தொடர்ச்சியாக ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி சார்பாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆர்.எஸ்.புரம்.இராஜஸ்தானி நிவாஸ் அரங்கில் நடைபெற்றது…
வொகேஷனல் அவார்ட்ஸ் (Vocational Awards) மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இதில்,மாவட்ட இயக்குனர் சம்பத் குமார்,துணை ஆளுனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி பி.டி.ஜி.ஏ.கே.எஸ்.ரொட்டேரியன் ராஜசேகர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டு தொழில் சார் சிறப்பு விருதுகளை வழங்கினார்..
இதில் கோவையை சேர்ந்த சர்வதேச தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ்,ரைபிள் ஷூட்டர் சாம்பியன் ஜோஷிகா,மற்றும் விஞ்ஞானி சாந்தனு பவுமிக் ஆகியோருக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
விழாவில் ரோட்டரி கிளப் கோயமுத்தூர் காட்டன் சிட்டி தலைவர் தருண் குமார் ரங்கா,இயக்குனர் நீதிகா பிரபு,செயலாளர் பாயல் சோர்டியா,விழா தலைவர் குமார்பால் தாகா,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்…