கோவை
பத்துஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் கூட்டத்தில் கண்டன அறிக்கை..
தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு, மற்றும் கோவை மாவட்ட இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்கம் 9 ஆம் ஆண்டு பொதுக்குழு தலைவர் கௌதமன் தலைமையில் பீளமேடு மணி மஹாலில் நடைபெற்றது. 18 மாவட்டங்களில் இருந்தும் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள தமிழக கல்விக் கொள்கை மிகவும் வேதனை அளிப்பதாகவும், குழந்தையின் பெரும்பகுதி மூளை வளர்ச்சி ஆறு வயதில் முடிந்துவிடும் என்பது அறிவியல் கோட்பாடு. வளர்ந்து வரும் அறிவியல் கோட்பாடுகளின் படி ஆறு வயது உள்ள குழந்தைகளின் வளர்ச்சி காலம் மிகவும் முக்கியமானது. முன்பருவ கல்வி தொடர்பாக கல்வி கொள்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. சுமார் பத்து லட்சம் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் நிலையில், சுமார் 4 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே முன்பருவ கல்வியை பெறுகின்றனர்.
கட்டாயமாக பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் என்ற வயது மூன்றாக நிர்ணயிக்கப்படும் நிலையில், கல்வித்துறையில் அதற்கான ஏற்ற மாற்றங்களை செய்ய பொதுக்குழு வேண்டுகிறது.
ஒன்றாம் வகுப்பில் குழந்தையை சேர்க்கும் வயது 5 என நிர்ணயித்திருப்பது அறிவியலுக்கு எதிரானது. உயர்த்தப்பட்ட பாடங்களுக்கு ஏற்றவாறு வயதை ஆறாக மாற்ற வேண்டும். முன்பருவக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளே கற்றுக் கொடுக்கிறது. விருப்பமுள்ள பெண்கள், வீட்டின் அருகிலேயே மழலையர் பள்ளிகளை நடத்தி வருகின்றனர்.
அரசனது அடுத்தடுத்து கடுமையான சட்டங்களை அறிவித்து, பள்ளிகளை மூட முற்படுகிறது. இது பள்ளிக்கூடங்கள் நடத்தப்படுவதற்கு தடையாக உள்ளது, இது தவிர்க்கப்பட வேண்டும். பணிபுரிபவர்களில் பெண்களும் உள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வாடகை கட்டிடத்தில் செயல்படும் பள்ளிகள் 16 ஆண்டு வாடகை ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். வரைபடமும் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும்.
வரைபடம் பள்ளியின் பெயரில் இருக்க வேண்டும், தனிநபர் பள்ளி நடத்துவது பறிக்கப்பட்டு, டிரஸ்டுகள் மட்டுமே நடத்த முடியும், ஐந்தரைச் சேர்ந்த நிலம் வேண்டும் என அடுக்கடுக்காக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளால் பெரும்பாலும் இளம் மழலைர் பள்ளிகளை பாதிக்கப்படுகிறது. மழையிலயர் பள்ளிகளில் ஒரு பள்ளி அங்கீகாரம் பெறுவதற்கு, எட்டு அரசு அதிகாரிகளின் சான்றிதழ்கள் பெற வேண்டி உள்ளது.
ஒவ்வொரு அதிகாரியும், நடத்தை விதிகளுக்கு மாறாக ஒப்புதல் அளிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றன. சான்றிதழ்களை உரிய நேரத்தில் வாங்கி சமர்ப்பிக்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் அரசாங்கம் சட்ட திருத்தம் அறிவிக்கும் போதும், இளம் மழலையர் சங்கங்களிடம் அரசு கலந்து பேசி அறிவித்தால் சிறப்பாக இருக்கும். முன்பருவக் கல்வி முறை, பெண்கள் உரிமை, பள்ளிகளால் பெண்கள் வேலைக்கு போகும் நிலை அதிகரித்துள்ளது இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். இதை தமிழ்நாடு முதல்வர் தனி கவனமாக எடுத்துக்கொண்டு, இளம்மழலையர் பள்ளிகள் செம்மையாக செயல்பட உதவிட வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசுக்கு நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் பிரச்சனைகள் தான் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது, கல்வித்துறை அதிகாரிகள் தங்களின் மனம் போன போக்கில் பைல்களை எல்லாம் ரிட்டன் செய்கிறார்கள். இந்தத் துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதை மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக பார்க்கிறோம்..
கல்வித்துறை அதிகாரிகளிடையே லஞ்சம் புழங்குவது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கோவை இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்க தலைவர் K. கௌதமன், செயலாளர் G. ஜெரோம் , பொருளாளர் K. முகேஷ், மற்றும் குமுதா காந்தி, கீதாஞ்சலி, லதா, ராமதாஸ், ஜெயகுமார், ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.