புதுச்சேரி பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது பள்ளி தலைமை ஆசிரியர் கிரில் ஜியோபோர்ட் லூயிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர் ஆனந்தன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்வில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி சார்பாக பூரணாங்குப்பம் “பனை” ஆனந்தன் கலந்து கொண்டு ஆசிரியர்கள் அனைவருக்கும் பனை ஓலையில் செய்யப்பட்ட இயற்கை பொருட்கள் வழங்கி ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார் இதில் கெளவத் தலைவர் திரு. குமாரசாமி துணைத்தலைவர் திரு. வண்டிமுத்து பங்கு பெற்றனர் முடிவில் ஆசிரியர் திரு .வடிவேல் நன்றி கூறினார் இதில் 200 மாணவர்கள் பங்கு பெற்று ஆசிரியர்களை வாழ்த்தினார்கள்