அலங்காநல்லூர்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவபட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாறுதல், மருத்துவ காப்பீடு, பொது மக்களுக்கு மருத்துவ பரிசோதனை, காவல்துறை சார்ந்த மனுக்கள், ஆதார் அட்டையில் திருத்தங்கள், உள்ளிட்ட பல்வேறு மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அரங்குகளில் உள்ள அலுவலர்களிடம் ராஜாக்கல்பட்டி, மறவபட்டி சத்திரவெள்ளாளப்பட்டி,ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கினர்.
இதில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நேரடியாக கள ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தர்ராஜன், கண்ணன், திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், முத்தையன்,மற்றும் ஊராட்சி செயலர்கள் பூமிநாதன், முத்துக்குமார்,கலந்து கொண்டனர்.