கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த C.P.இராதாகிருஷ்ணன்அமோக வெற்றி பெற்றுள்ளார். அதனைமுன்னிட்டுகரூர் பேருந்து நிலையம் மனோர ரவுண்டா அருகில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் V.V. செந்தில்நாதன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
நடைபெற்ற துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதன் மூலம், தேசத்தின் 15-வது துணைக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கவுள்ள சி.பி.இராதாகிருஷ்ணன்க்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசத்தின், ஒரு சாதாரண சேவகராக தன்னுடைய பொது வாழ்வை துவங்கியவர், நமது பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்புமிக்க தலைவராகவும், மக்களவை உறுப்பினராகவும் திறம்பட செயல்பட்டு வந்துள்ளார். இத்தனை ஆண்டு காலமாக தான் ஆற்றிய கடமைகளுக்கும், சேவைகளுக்கும், சான்றாக தேசத்தின் மிக முக்கிய பொறுப்பான துணைக் குடியரசுத் தலைவராக.சி.பி.இராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது,
மிகுந்த மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும்.தமிழகத்திலிருந்து ஒரு பிரதிநிதியை முன்னிலைப்படுத்தி, இத்தகைய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி க்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான.JP.நட்டா ஜி க்கும், தமிழக மக்கள் சார்பாக எனது மனமார்ந்த நன்றிகளைத்தெரிவித்தார். மாவட்ட தலைவர் செந்தில்நாதன் இந்நிகழ்சியில் பாஜக கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.