பேராசிரியர் மோகன் கிருஷ்ணாபுரம் திலகவதி அறக்கட்டளை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம், பதியம் இலக்கிய சங்கமம் இணைந்து தமிழ் மொழி மேன்மைக்கும் , சமூக மேம்பாட்டிற்கும் தொண்டாற்றிய அமைப்பிற்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.


சிறப்பு விருந்தினராக விஜிபி தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோஷம் பங்கேற்றார்.
விழாவில் தமிழ் மொழி மேன்மைக்கும் சமூக மேம்பாட்டிற்கும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க தமிழ் நூல்கள் மற்றும் இலக்கியப் புத்தகங்களைச் சேகரித்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க‌ 1995 ஆண்டு முதல் இல்லத்திலேயே இலவச நூலகத்தை நடத்தியும்,காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு ஆதரவற்று இறந்து உரிமை கோரப்படாமல் இருக்கும் பிரேதங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினைப் பாராட்டி பொற்கிழியுடன் 2026தமிழ் சுடர் விருதினைபேராசிரியர் மோகன் கிருஷ்ணாபுரம் திலகவதி அறக்கட்டளை பேராசிரியர் முனைவர் திலகவதி,சென்னை அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் ரா.வேல்ராஜ்,மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்க நிறுவனச் செயலர் சென்னை வானொலி நிலைய மேனாள் இயக்குநர்
கலைமாமணி முனைவர் சேயோன் உள்ளிட்டோர் வழங்கினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *