C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர்,
2026-சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2026-சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு அலுவலர்களுடன் 07.03.2026 அன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பாக மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கெளாள்ள தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், சுற்றுலா தளங்கள், மார்க்கெட், கடற்கரை போன்ற இடங்களில் கிராமிய கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள்,பேரணி, மாரத்தான், மனித சங்கிலி போன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும்,100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்தும், நம் வாக்கு நமது உரிமை போன்ற விழிப்புணர்வு வாசங்கள் பிரசுரிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் விநியோகம், வாகனங்களில் ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், ராட்சத பலூன் பறக்க விடுதல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பில்களிலும், ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகித்திடும் பால் பாக்கெட்டுகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
18 வயது நிரம்பிய முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தேர்தல் குறித்தும்,
100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரிகளில் கலைநிகழ்ச்சிகள் நடத்துவதுடன், துண்டுபிரசுரங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்கினை தவறாது செலுத்தி ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.